விடுமுறை டைரி

Jan
2012
02

on

No comments


கடந்த வாரம் வியாழக் கிழமை. அப்பா பிறந்த நாள். காலையில் எழுந்து டிரைவிங் கிளாஸ் சென்று திரும்ப வந்தவுடன் அம்மா என்னை அழைத்தார். 
“கண்ணு! இன்னைக்கு இருந்து ஒரு சபதம் எடுத்துக்கிறேன். இனிமேல் யாரையும் குறை சொல்லக் கூடாது. இன்னொருத்தங்க யாரைப் பத்தியாவது குறை சொன்னாலும் அதை நம்மளோட வச்சிக்கணும். மேலும், நம்மளை பத்தி நம்ம கிட்டே யாரவது குறை சொன்னாலும் அதை பெருசா எடுத்துக்க கூடாது”  
(எங்க அம்மா உபயோகித்த வார்த்தைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சற்று வித்தியாசமாகத் தோணலாம். ஆனால் எனக்கு இது புதிதல்ல. எங்கம்மா அற்புதமான வார்த்தைகளின் சொந்தக்காரி. அம்மாவின் சொற்கள் ஒருவரை எளிதில் வசியப்படுத்தி விடும். அதே சமயத்தில் மிகவும் சங்கடமான விஷயத்தை கூட வெகு அனாயசமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்.)
சரி விஷயத்திற்கு வருவோம்.  நான் கேட்டேன். “அம்மா! என்ன இந்த திடீர் மாற்றம்?”
“இல்லைடா! சும்மா தோனுச்சு. எனக்கும் வயசாகுதுல்ல. மனசு பக்குவப்படுது”
“அம்மா!வர வர உன் பக்குவத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்குது. அது சரி இதெல்லாம் நீயே யோசிக்கிறியா? இல்ல பதினொரு பேர் கொண்டா குழு எதாச்சும் வெச்சு இருக்கியா”?”
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் அம்மாவுக்கும் மகனுக்குமான ரகசிய சம்பாஷணைகள். இது போல இன்னும் சில இந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்து விட்டன. அவற்றையும் பார்ப்போமே!

2...
பேருந்தில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஒரு 16 –17 வயசிருக்கும். அழகாக தலைக் குளித்திருந்தாள். பூவைத்திருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் “ அம்மா ஒரு பொண்ணை பஸ்-ல பார்த்தேன். கறுப்பா  தான் இருந்துச்சு. ஆனா ரொம்ப அழகா இருந்துச்சு.”
அதுக்கு அம்மா சொன்னாங்க “இந்த வயசுல உனக்கு யாரைப் பார்த்தாலும் அழகாத்தான்டா தெரியும்!”
(எனக்கு “அண்ணே! இப்போதைக்கு உனக்கு எங்கண குத்தி இருந்தாலும் வலிச்சு இருக்காது” ன்னு கேட்டது.)
அம்மா தொடர்ந்தார். “ஒரு ஆறு மாசம் பொறு! உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வச்சுடறேன்”
அதனால் “இதுவரை என்னை சைட் அடித்த, ஓரக் கண்ணால், சைடு கண்ணால் பார்த்த, ஒரு தலையாகக் காதலித்த எல்லா அரிவை களுக்கும் தெரிவைகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்னும் ஆறு மாதத்திற்குள் உண்மையை என்னிடம் ஒப்புக்கொள்ளவும். இல்லையெனில் ஆறு மாதத்திற்குப் பிறகு “ஒக்க சாரி கமிட்ஆயித்தே னா மாட்டல நேனே வின்னனு””


3...
இன்னொரு நாள் ரசம் சாதம் போட்டு பிசைந்து அம்மா ஊட்டி விட்டுக் கொண்ட்டிருந்தார். நானும் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
அதைப்ப்பார்த்த அப்பா “உன் ஆர்வக் கோளாறுக்கு அளவே இல்லடி” என்றார்.
நானோ ரொம்ப கூலாக “உங்களுக்கு எதுக்குப்பா வயித்தெரிச்சல். நீங்களும் வேணும்னா ஒரு வாய் வாங்கிக்கோங்க” என்றேன்.
அப்பா அப்படியே  ஒரு பார்வை பார்த்து  விட்டு திரும்பி படுத்துக் கொண்டார். டி வி யில் ஒரு அழகான காதல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
அம்மா என்னிடம் “ஏன் கண்ணு. நீ ஸ்கூல் காலேஜ் ல எந்தப்  பொண்ணையும் காதலிக்கலையா?” ன்னு கேட்டாங்க.
“அம்மா! எனக்கும் சில பொண்ணுங்களை புடிச்சிருக்கு ஆனா அவங்களை காதலிச்சனா இல்லையான்னு எனக்கு சரியாத் தெரியல. இப்போதைக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை” ன்னு. (அந்த ‘இப்போதைக்கு’ ங்கிற வார்த்தையை நன்றாக கவனிக்கவும்)
அதற்கு அம்மா “ நீயும் உங்க அப்பா போல இருக்கு. உங்க அப்பாவெல்லாம் அந்த காலத்துல வீட்டுக்குள்ளேயே தான் இருப்பாராம். வெளி அனுபவம் அதிகம் இல்லாததனால் காதல் கீதல் னு எதுவும் இல்லையாம்” என்றார்.
அப்பா பேசவே இல்லை. யாருக்குத் தெரியும்? அப்போவோட பிளாஷ்பேக்கில் ஒரு அருக்காணியோ அம்சவல்லியோ ஓயாத அலைகளில் மணல் வீடு கட்டிக் கொண்டிருக்கலாம்.

4...
“அம்மா-யிஸம்” குறித்து நான் எழுத ஆரம்பித்தால் இன்னும் பல விஷயங்கள் எழுதலாம். ஆனால் இப்போதைக்கு திகட்டும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். இதன் அடுத்த பாகத்தை கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன். அதற்கு முன்பாக உங்களையெல்லாம் பொறாமைப் படுத்துவதற்காக ஒரு XL Xl sheetsheet இணைத்துள்ளேன். அது வேற ஒண்ணுமில்லீங்க. நான் போன வாரம் என்னவெல்லாம் சப்பிட்டேன்கிற தகவல் அட்டவணை தான். நன்றி : திரு மற்றும் திருமதி விஸ்வநாதன்.

Morning  Interim Lunch Evening snacks Dinner Late night
12/23/2011 egg dosa+wheat dosa banana+apple
12/24/2011 Tea+bread Idly+onion dosa tender coconut+coconut water Pudalangai kootu+Rasam + Aloo bonda+Curd vada Gobi chilli + Tea Same as lunch Banana
12/25/2011 Tea+bread Idly+botti+boiled egg + Raththap poriyal Rice + botti+ egg Same as lunch / But mom fed me Banana
12/26/2011 coffee Rice + Sambar + spinach  + egg mussombi juice same as breakfast  Tea + thattu vadai Kuzhip paniyaaram + egg paniyaaram Banana
12/27/2011 coffee tomoto rice + Egg burji Coffee + fried ground nut kara kuzhambu + rice tea + kara sev chappathi + mixed veg kuruma Milk + banana
12/28/2011 Coffee Dosas + Egg dosa Tea  Sweet + rice + sambaar + banana tea + kara sev + banana Rice + ridge guard + spinach + fish chilly milk  
12/29/2011 coffee idli + sambar coffee   Egg + chicken biriyani  Tea + biscuits + Tender coconut Rice + karuvaattu kuzhambu milk  
12/30/2011 Coffee+Murukku Kuzhip paniyaaram + egg paniyaaram mussombi juice Rice + pachai payiru kuzhambu+ poriyal Tea + bonda Same as lunch + curd rice
12/31/2011 Coffee Idly+ Meal maker gravy  Muruku + banana Vegetable fried rice  Tender coconut + papaya + "vaathu" muttai Dosa
1/1/2012 Tea Idly + dosa + sambar + chutney coffee Lunch outside Tea+ Murukku+ fishchilly + cool drink idly Upma + dosa


 

Leave a Reply