கஸல் காதல்!

Feb
2012
03

on

No comments


·        நான்
யாரிடம் போயச் சொல்ல
விழா நாட்களில்
கூடிப் போகும்
உன் மல்லிகை அழகை!


·        உன்னழகு மட்டும்
சலிப்பதே இல்லை!
ஞாயிறுகளிலும்
திங்கள் களிலும்
மற்றும்
சனி வரையிலும்!


·        நீ
அணியும்போது மட்டும்
எங்கிருந்து
பிறக்கிறது  அழகு,
இந்தக்
காதணிகளுக்கும்!
இந்தக்
கொலுசுகளுக்கும்!




·        வீட்டின் முற்றமும்
மொட்டை மாடியும்
ஏனோ
நீ இருக்கும்போது மட்டும்
பூந்தோட்டமாகிப்
போகின்றன...

·        இந்த
53 
கிலோ தங்கமே
கிடைக்கும்போது
வேறென்ன
வரதட்சனை
வேண்டியிருக்கிறது
எனக்கு!


நீ
தலை துவட்டும் போதும்,
கழுத்து மணியோடு சேர்த்து
நகம் கடிக்கும்போதும்
தவறாமல்
நிகழ்கின்றன இதயத்தின்
குறு மரணங்கள்!

Leave a Reply