“கவிதா!
எனக்கு கல்யாணம் நிச்சயமாயுடுச்சு”
.
“ஹேய்!
congratulations! என்ன பிரகாஷ்? சந்தோசமா
சொல்ல வேண்டிய விஷயத்தை இவ்வளவு சோகமா சொல்றே?!”
.
“மத்தவங்க
கிட்ட சொல்லியிருந்தா சந்தோசமா சொல்லி இருப்பேன்! உங்கிட்ட சொல்லும்போது, பொய்யா
ஒரு சந்தோசத்தை முகத்தில வரவழைக்க முடியல”
.
“ம்.. நீ
இன்னும் பழசை மறக்கலைன்னு நினைக்குறேன்”
.
“அதெப்படி
கவிதா, அவ்வளவு சுலபமா மறக்க முடியும்? உன்னால முடியுமா முதல்ல?”
.
“மறக்க
முடியும், முடியாதுன்கிறதெல்லாம் அப்புறம் பிரகாஷ். என் மனசுல எந்த சஞ்சலமும்
இல்ல. அதுக்கும் மேல, பழசை எல்லாம் நெனைச்சு உன்னை மாதிரி ஒரு நல்ல நண்பனை என்னால
இழக்க முடியாது.”
.
“நட்பு?
ம்ஹும். தயவு செஞ்சு அந்த வார்த்தையை திரும்ப சொல்லாதே கவிதா! காதலிச்ச பொண்ணை
தோழின்னு சொல்ற அற்பமான புத்தி எனக்கு இல்ல”
.
“ஆனா நான்
உன்னை எப்பவுமே அப்படி நெனைச்சதே இல்லையே!”
.
“நீ பொய்
சொல்றே”
.
“அப்படின்னு
நீ நெனைச்சுகிட்டா அது என்னோட தப்பு கெடையாது”
.
“இது
வெறும் வாதம்”
.
“உன்னால
வாதத்துக்கும் உண்மைக்கும் சரியா வித்தியாசம் கண்டுபிடிக்க முடியல.”
.
“உன்னாலதான்
காதலுக்கும் நட்புக்கும் சரியான வித்தியாசம் கண்டு பிடிக்க முடியல”
.
“இல்லாத ஒரு
விஷயத்தை இருக்குன்னு எப்படி சொல்ல முடியும்?”
.
“நீ
உன்னையே ஏமாத்திக்கிறே கவிதா.. கொஞ்சம் மனசை தொட்டு உண்மையை சொல்லு. At least உன்
மனசுல நான் இருக்கேன்கிறத மட்டும்
சொல்லிடு. அந்த சந்தோசத்திலேயே நான் ஏன் வாழ்க்கையை கழிச்சுடுறேன்.”
.
“நான்
சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன் பிரகாஷ். திரும்பவும் சொல்றேன். நீ
சந்தோசப்படனும்கிறதுக்காக ஒரு பொய்யை சொல்லவும் மாட்டேன். அதுக்கான அவசியமும்
எனக்கு கெடையாது”
.
“சே! ஏன்
பொண்ணுங்க எல்லாம் இப்படி கல் மனசுக்காரங்களா இருக்கீங்களோன்னு தெரியல.”
.
“இல்லை!
பசங்கதான் ஆண்-பெண் நட்புக்கு சரியான வித்தியாசம் தெரியாம காதல், கீதல்னு உங்களை
நீங்களே குழப்பிக்கிறீங்க!”
.
“ஆமாண்டி!
நாங்கல்லாம் பைத்தியக்காரங்க. நீங்க ரொம்ப புத்திசாலி பாரு...”
.
“நான்
அப்படி சொல்லலியே..”
.
“பின்ன?!
இதுக்கு என்ன அர்த்தம்..?”
.
“cool down
Prakash! நீ ரொம்ப குழம்பிப் பொய் இருக்கே! நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகப்
போகுது.. உன்னையே நம்பி ஒரு பொண்ணு வரப்போறா.. அவளுக்கு நெறைய கனவுகள் இருக்..”
.
“அந்த ஈர
வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.. தயவு செஞ்சு advice மட்டும் பண்ணாதே”
.
“சரி விடு!
என்னை என்னதான் பண்ண சொல்றே”
.
“எதுவும்
பண்ண வேணாம்! கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இரு”
.
“.....”
“.....”
“....”
“....”
“....”
.
“ஏன்
கவிதா? இந்த எட்டு வருஷத்துல, எனக்கு என் மனசுல தோனின மாதிரி, உனக்கு எதுவும்
தோனல? உன்னோட பாஷையில சொல்லனும்னா , நம்ம
நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும் னு நீ எப்பவுமே யோசிச்சதில்லையா?”
.
“....”
.
“பதில்
சொல்லு கவிதா”
.
“இல்லை
பிரகாஷ்! மனசார சொல்றேன்! எனக்கு எப்பவுமே அந்த மாதிரி தோனினதில்ல.நீ நம்புறியோ,
இல்லையோ நான் உன்னை நல்ல நண்பனாத்தான் பார்க்குறேன்”
.
“ஆனா
என்னால அப்படி நெனைக்க முடியறதில்லையே,”
.
“அது உன்
தப்பில்ல பிரகாஷ்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நான் மனைவியா வந்த நல்லா
இருக்கும்னு நீ விரும்புற. அதை எந்த கோணத்திலேயும் என்னால தப்பா நெனைக்க
முடியலை.and you have always made me comforortable with you..”
.
“அப்புறம்
ஒத்துக்க வேண்டியதுதானே”
.
“see
prakash! திரும்ப சொல்றேன் உன்னை எனக்கு
ரொம்ப பிடிக்கும்.. இந்த எட்டு வருஷமா என்னை ரொம்ப நல்ல பார்த்துகிட்டு
இருந்திருக்கே. நாகரிகமான முறையில காதலை சொல்லியிருக்கே.. starting from exams to interviews ஒவ்வொரு
விஷயத்திலேயும் எனக்கு பக்க பலமா இருந்திருக்கே. ஆனா...”
.
“ஆனா..
என்ன”
.
“உனக்கு
தெரியாம இல்லை. எனக்குன்னு சில வரை முறைகள் இருக்கு. குடும்ப கட்டுப்பாடுகள்
இருக்கு. நான் அதுக்குள்ளேயே வளர்ந்துட்டேன்.”
.
“நான் தான்
உங்க வீட்ல வந்து பேசறேங்கிறேனே! அதையும் நீ வேணாம்னுட்டே”
.
“வேண்டாம்..
பிரகாஷ்! அவங்களும் நம்மை நல்ல friends- ன்னுதான் நெனைச்சுட்டு இருக்காங்க ..
அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாமே.”
.
“எப்படி
கவிதா.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வெச்சுருக்கே..”
.
“கேள்வின்னு
ஒண்ணு இருந்தா பதில்னு ஒண்ணு இருக்கணுமே பிரகாஷ்!”
.
“...”
.
“...”
.
“ஓகே..
முடிவா நீ என்னதான் சொல்றே...”
.
“உன்
கல்யாணத்துக்கு மணப்பெண் தோழியா வர்றேன்னு சொல்றேன்”
.
“நான் அதை
கேட்..”
.
“Prakash!
நாம பேசினா பேசிகிட்டே தான் இருப்போம்.. விடு எல்லாத்தயும் மறந்துட்டு, enjoy your
marriage life..நான் எங்கே போகப்போறேன்.. இங்கேதான், உன்கூடவேதான் இருக்கபோறேன்”
.
“...”
.
“நீயே
என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன். நீ சட்டையை மடிச்சு விட்டிருக்கும்
போது பட்டன் போட சொல்வேன். நீ சின்ன சின்னதா குறும்பு பண்ணும்போது உன் தலயில
செல்லமா குட்டுவேன். உன் எல்லாக் கவிதைகளையும் முதல் ஆளா நான் தான்
படிக்கப்போறேன். உன் எல்லாப் பிறந்த நாளுக்கும் நான்தான் முதல் வாழ்த்து
சொல்லப்போறேன்.. சரியா?”
.
“ம்..
சரி..”
.
“ஏன் ‘உர்’
ருன்னு இருக்கே.. இங்கே. அந்த சிங்கப்பல் தெரியுற மாதிரி ஒரு சிரிப்பு சிரி
பாப்போம்”
.
“ஈ..ஈ”
.
“yes!
Thats my boy! அப்புறம் உன் ஆளு நம்பர் குடு. நான் அவளை கொஞ்சம் சதாய்க்கணும்”
.
“9036131410”
.
“சரி
பிரகாஷ்! நான் கெளம்பறேன்.. வீட்டுக்குப் போயிட்டு SMS பண்றேன்”
.
“..வந்து...”
.
“..ம்.
சொல்லு..”
.
“...”
.
“...”
.
“...You
are a beautiful article kavitha! (long pause)
Take
care.... and I mean it, really!”
.
“... Th..
Thanks Prakash! வரேன்!”