சாலூர் ராசா...
கிராமத்தில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு, தினம் தோறும் வீடு வீடாக
சென்று பிச்சை வாங்கி உணவு உண்டு, பெரும்
அவமானங்களை கூட தாங்கிக்கொண்டு, வாழ்வில் எந்தக் கவலையும் அற்று சுற்றித் திரியும்
அப்பாவி இளைஞன்.
Mr.A. Son of a merchant. Born and brought up in a
remote village of Tamil nadu. Lives happily with his family in his village till
he completes his studies.
ராசாவுக்கு காதல்
வருகிறது. காதலின் காரணமாக பொறுப்புகள் கூடுகிறது, நல்ல வேலை செய்து சம்பாதிக்க
வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை தேடி வேற்றூர் செல்கிறான்.
Mr.A completes his engineering. Gets into a job.
forced to earn heavily, just like his fellow youngsters. He starts to seek for
highly paid jobs in the corporate world. Eventually becomes a software
engineer. The enticing IT job extends its beautifully disguised hands to our
lad and he believes it will redeem his life altogether.
ஒரு களங்காணி (கூலிகளை
வேலைக்கு எடுப்பவர்) கண்ணில் ராசா பட்டுவிட, அவனையும் அவனுடைய கிராமத்து
மக்களையும் ஆசை காட்டி தேயிலை எஸ்டேட்களில் கொத்தடிமைகளாக வேலை செல்ல அழைத்துச்
செல்கின்றான்.
Mr.A Slogs at his work. Gets top appraisal ratings all
the time. After two years, He wants to go to onsite. Slogs harder. As a result
Visa Gets stamped. With dreams of buying the entire world, he flies out of his
native land.
ஏழைகளின் ரத்தம்
உறிஞ்சும் வெள்ளைக்கார முதலாளிகளின் அதிகாரப் பசிக்கு தன் வாழ்வை, இளமையை, காதலை பலியாக்குகிறான்
ராசா. உயிர் வருத்தி வேலை செய்தும் கூட தன் தேவைக்கு போதுமான பணம் சம்பாதிக்க
இயலாமல் காலம் முழுக்க அடிமையாகவே வாழ்கிறான்.
Mr.A works hard even in onsite. He wants to settle
all the loans of his father. Builds a house in his native place. Saves some
money for his marriage, more money for his own house, more money for a car, more
money for his gadgts, more money for his sons, grand sons and some more money
for the descendents he will never see in his life and never comes back to his
native land. End of his life he would have served enough to build some software
applications that neither him nor anybody in his eyesight will ever be using in
their lifetime.
சோறும், சுய மரியாதையும்
தாங்க வாழ்கையில நிதர்சனம். மத்ததெல்லாம் தற்காலிகம்தான். நம்மளோட தேடல் எப்பவுமே
அந்த தற்காலிகத்த நோக்கியே இருக்குது ங்கறது தான் கசப்பான உண்மை. நாம எத தேடுறோம்,
எத நோக்கி ஒடுறோம், நம்ம உண்மையான சந்தோஷம் என்னங்கிறதெல்லாம் நமக்கே சரியா
தெரியறதில்லை. என்னைப் பொருத்த வரைக்கும் பரதேசிக்கும் ஒரு software engineerக்கும்
வித்தியாசம் ஏதும் இல்லை. வேணும்னா இப்படி வெச்சுக்கலாம். அவன் ரூபாய்க்காக
வாழ்க்கையைத் தொலைக்கிறான். நாம சில டாலர் களுக்காக வாழ்க்கையைத் தொலைக்கிறோம்.
அவ்ளோதான்.. திரும்பி பார்க்கும்போது நம்ம அப்பா அம்மா அனுபவிச்ச, நிலாச்சோறு,
தேர்த் திருவிழா, பங்காளி சண்டை, வாய்க்காத் தகராறு, முறைமாமன் சீரு, மாப்பிள்ளை
குசும்பு, ஆடி அமாவாசை, பங்குனி உத்திரம், ஊர்ப் பஞ்சாயத்து, கெடா விருந்து,
ஒப்பாரி, சாவு மேளம், மொய் சோறு, காது குத்து, குத்த வெச்சது, குடிசை கட்டுறது,
சேவப் பொங்கல், காவடி ஆட்டம், ரிக்காடான்ஸ், கட்சிக் கொடி, கறை வேட்டி, கவுன்சிலர்
எலெக்ஷன், சுருட்டு, பனங் கள்ளு, குறவன் குறத்தி, கூத்தியா கதைகள், பட்டம், பஞ்சு
மிட்டாய், கோணப் புளியாங்காய், உண்டி வில்லு, ஊர்க் குருவி, வாடகை சைக்கிள், பெட்டர்
மாக்ஸ் லைட், பேனு பார்க்கறது, பென்சில் சீவுறது, பன்னி புடிக்கிறது, டென்ட்
கொட்டாயி, சரோஜா தேவி புக், பிட்டு படம், எதையும் நாம அனுபவிக்க போறதில்ல..
எல்லாம் விடுங்க பாஸ்.. எங்க பள்ளி கூடத்துக்கு முன்னாடி ஒரு ஆயா கூடயில மாங்காய்
கீத்து வச்சு வித்துட்டு இருக்கும்.. எட்டணாவுக்கு ரெண்டு வாங்கிட்டு ஒண்ணு
ஆட்டையப் போடுவோம் அந்த சுகத்த நம்ம next Generation க்கு எப்படி குடுக்கப்
போறோம்?
..... பாலா சார்..
நீங்க “நான் கடவுள்” மாதிரியும் படம் எடுக்குறீங்க.. இப்படியும் படம்
எடுக்குறீங்க.. என்னமோ போங்க.. இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்..